deepamnews
இலங்கை

எரிசக்தி இறக்குமதிக்கு வாரத்துக்கு 50 மில்லியன் டொலர்களே வழங்க முடியும் – மத்திய வங்கி

எரிசக்தி இறக்குமதிக்காக வாரமொன்றுக்கு 50 மில்லியன் டொலர்களை மட்டுமே, அரசாங்கத்தினால் வழங்க முடியும் என இலங்கை மத்திய வங்கியும் திறைசேரியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இந்த நிலை காணப்படுகிறது.

நிலக்கரி இறக்குமதிக்கும் இது பொருந்தும், ஏனெனில் நிலக்கரிக்கான கடன் வசதி எங்களிடம் இல்லை.

இந்த 50 மில்லியன் டொலரில் இருந்து நிலக்கரிக்கான நிதியையும் ஒதுக்க வேண்டும். இதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலை.

35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அல்லது டீசல் இறக்குமதிக்கு 40 தொடக்கம் 50 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொள்வனவுக்கு  75 தொடக்கம் 85 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும்.

ஏப்ரல் மாதம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 751 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருந்தது.

சுமார் 350 மில்லியன் டொலர் நிலுவைத் தொகை இப்போது தீர்க்கப்பட்டு, 400 மில்லியன் டொலர் நிலுவையாக உள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

videodeepam

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நாட்டிற்கு வருகை

videodeepam

இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய நாணயத்தை பயன்படுத்த அனுமதி

videodeepam