deepamnews
சர்வதேசம்

தாய்வானை இணைப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்-  சீன ஜனாதிபதி

தாய்வானை இணைப்பதற்கு, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்’ என, சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின், மாநாடு நேற்று துவங்கியது.

கட்சி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய ஷீ ஜிங்பிங்,

எம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமான தாய்வானை, மீண்டும் நம்முடன் இணைக்க உள்ளோம்.

தைவானில் உள்ள மக்களும் இதையே விரும்புகின்றனர்.

ஆனால், சில வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலால், சில பிரிவினைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைதியான முறையில் இணைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

அதே நேரத்தில், இந்த பிரிவினைவாதிகளை ஒடுக்கி, தாய்வானை எம்முடன் இணைப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்.

ராணுவம் முழுமையான அளவுக்கு தயார் நிலையில் இருக்கும் வகையில், தேவையான பயிற்சிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கும்.

தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவோம். உத்தரவுகளை ராணுவம் செயல்படுத்தும் வகையில், கட்சி வலுப்படுத்தப்படும்.” என்றும் அவர் கூறினார்.

Related posts

பாகிஸ்தான் சிற்றூர்தி விபத்தில் 11 குழந்தைகள் உள்லிட்ட  20 பேர் பலி

videodeepam

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam

உக்ரைனின் 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!

videodeepam