deepamnews
இலங்கை

அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கையில் அமைக்கும் சீனா

நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இலங்கையில் சீன முதலீடாக ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. இதனால் புதிய தொழில்நுட்பத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை விரைவில் திறக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்.

videodeepam

பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

videodeepam

அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

videodeepam