பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் இது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி லண்டனில் ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமை சந்தித்துள்ளார்.
விவசாயம், சுகாதார சேவைகள் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இரு நாடுகளும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இயற்கைப் பேரிடர்களுக்கு விரைவாகப் பதிலளிப்பதற்காக ருவாண்டா மக்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.