deepamnews
இலங்கை

ஈரானில் இருந்து இலங்கைக்கு புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் நன்கொடை

ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சில் நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நன்கொடையின் கீழ், இலங்கையில் பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும், புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிம்மதி அளிப்பதாகவும், அதற்காக இலங்கை பிரஜைகள் சார்பாக ஈரான் மக்கள் உட்பட ஈரான் குடியரசிற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி – அனுரகுமார திஸாநாயக்க குற்றசாட்டு

videodeepam

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் ஐ.தே.கட்சியில் இணைவு – பாலித்த ரங்கே பண்டார தெரிவிப்பு.

videodeepam