deepamnews
இலங்கை

முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினையை பேச ஜனாதிபதி முன்வரவேண்டும் – எம் எஸ் தௌபீக் கோரிக்கை

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (11.04.2023) உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 25, 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் நிரந்தர தீர்வை பெறவேண்டும் என்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது போல முஸ்லிம் சமூகமும் காணிகள் மற்றும் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறோம். தற்போது நாங்கள் ஒரு சில சிறிய சலுகைகளை பெறுவதற்குகூட போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளுடனும், தலைவர்களுடனும் பேசி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு விஜயம்!

videodeepam

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை!

videodeepam

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்

videodeepam