deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நுவரெலியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதேவேளை, இன்று நுவரெலியா மாவட்ட நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நுவரெலியா மாவட்டத்தில் பட்டிப்பொல – பொரலந்தவுக்கும் இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உலக முடிவைப் பார்வையிடும் வகையில், இந்த கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

videodeepam

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேண நாணய சபை தீர்மானம்

videodeepam

– ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகை தொடர்பில் கலந்துரையாட தீர்மானம்: அரசாங்கம் புதிய நகர்வு

videodeepam