deepamnews
சர்வதேசம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் தலிபான்களால் கைது

பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்.

இதன்போது மூன்று பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் தகார் மாகாணத்திலும் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து. நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கடந்த ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண் கல்வியை கட்டுப்படுத்தும் அண்மைய கொள்கை இதுவாக அமைந்துள்ளது.

நாட்டின் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பெண்கள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய தடையை தாலிபானின் உயர்கல்வி அமைச்சர், கடந்த செவ்வாய்கிழமை உடனடியாக நடைமுறைப்படுத்தினார்,

பல்கலைக்கழக பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழலை அதன் அறிஞர்கள் மதிப்பீடு செய்துள்ளதாகவும், “தகுந்த சூழல் வழங்கப்படும் வரை” பெண்களுக்கான வருகை இடைநிறுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சகம் கூறியது.

வியாழன் அன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் சுமார் ஆப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாப் அணிந்து காபூலின் தெருக்களில் அணிவகுத்து செல்வதையும், பதாகைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்புவதையும் காட்டுகிறது.

இந்த குழு முதலில் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான காபூல் பல்கலைக்கழகத்தின் முன் கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது, ஆனால் அதிகாரிகள் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை அங்கு நிறுத்தியமையால், இடம் மாற்றப்பட்டது.

சில சிறுமிகளும், பெண் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயாராகும் பிரித்தானியா!

videodeepam

பாகிஸ்தான் சிற்றூர்தி விபத்தில் 11 குழந்தைகள் உள்லிட்ட  20 பேர் பலி

videodeepam

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது இரண்டாவது முறையாக தாக்குதல!

videodeepam