deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி – இதுவரை 60 பேர் பலி

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி (Bomb Cyclone)என்று அழைக்கப்படும்  பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இடைவிடாது பனி பொழிவதால், வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது. 

அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடர்ந்தும் பனிப்பொழிவு ஏற்படுவதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். 

குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள். 

இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 

சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

videodeepam

நாட்டை அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என காண்பித்தவர் ஜெசிந்தா- அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவிப்பு

videodeepam

பாகிஸ்தானில் பதற்றம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

videodeepam