மகிந்த ராஜபக்ச தலைமைத்துவத்தை விட்டு வெளியேறியதாகவும், மக்களின் விருப்பத்துடன் தான் மீண்டும் தலைமைக்கு வரவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்காக கொழும்பு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீழ்ந்த நாடு மீண்டும் எழுச்சி பெறப் போராடுவதன் மூலம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிற்கு கடுமையான பாதுகாப்பைப் பிரயோகிப்பதன் மூலம் சுற்றுலாத்துறை, முதலீடுகள் மாத்திரமன்றி நாட்டின் நன்மதிப்பும் சேதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.