deepamnews
இலங்கை

முல்லைத்தீவில் சிறுமிகளை கடத்த முயற்சித்த விவகாரம் – விசாரணை தீவிரம்

ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் பதிவான கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது கூளர் ரக, ஹயஸ் ரக இரு வாகனங்கள் தம்மை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு வாகனத்தில் இருந்து கதவு திறந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் அந்த சிறுமிகளை தாம் வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதாக கூறியுள்ளனர்.

குறித்த குழுவினரின் நடவடிக்கைகளினை சுவீகரித்த சிறுமிகள் அங்கிருந்து அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் தப்பியோடி அந்த வீட்டுக்காரருக்கு தம்மை இரு வாகனங்கள் கடத்த முயற்சித்ததாகவும் தம்மிடம் மேற்கூறப்பட்டவாறு கடத்த முயன்றவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதும் குறித்த வாகனத்தின் நடமாட்டத்தினை கிரமவாசிகள் அவதானித்ததாகவும் கிராமவாசி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் வழங்கிய பின்னர் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வெளியான சுற்றறிக்கை

videodeepam

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

கடன் மறுசீரமைப்பின் போது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் – நாணய நிதியம் கோரிக்கை

videodeepam