deepamnews
இலங்கை

ஆசிரியர்களால் மாணவர்கள் துஸ்பிரயோகம்  – ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்துறைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சில ஆசிரியர்கள் வயது வந்தவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவில் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்ட கட்டமைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டம் கட்டாயம் திருத்தப்பட வேண்டும். புதிய சட்டங்களை வகுக்கும் போது கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Related posts

கடும் கோபத்தில் ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கை.

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam

வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் – வவுனியாவில் போராட்டம்!

videodeepam