deepamnews
இலங்கை

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு-ஜனாதிபதி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா (Yasuo Fukuda) மற்றும் ஜப்பான்-இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.

டோக்கியோவில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை (Yoshihide Suga) சந்தித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மீண்டும் வந்தும் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி முகத்திடல், அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

videodeepam

வறுமையில் சிக்குண்டுள்ள இலங்கையர்கள் சொத்துக்களை விற்கின்றனர் – உலக உணவுத்திட்டம் அறிவிப்பு

videodeepam

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு

videodeepam