deepamnews
இலங்கை

சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கொரோனா நெருக்கடி, பொருளாதார கஷ்டத்துக்கு மத்தியில் மாணவர்கள் இதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையே நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான  வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியது. பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு  விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு  இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வார இறுதி நாட்களில் பரீட்சை நடைபெறுகின்ற போது, வார நாட்களில் முன்னெடுப்பது போன்று  ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை கடற்படையினரால் சீன கப்பலின் 14 பணியாளர்களின் சடலங்கள் மீட்பு!

videodeepam

ஜனாதிபதின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு.

videodeepam

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலப்பின சூரிய கிரகணம்

videodeepam