ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக்கு அருகாமையில் உள்ள பழைய வீடு ஒன்றில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பேரில் ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்கள் குறித்த போதை பொருள் பாவனையில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் குறித்த போதை பொருளை ஊசி மூலம் செலுத்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இவரது சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.