deepamnews
இலங்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களில் 25 சதவீதத்தினர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அந்த பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், வருடத்தின் கடந்த சில மாதங்களில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐத் தாண்டியுள்ளது.

இதேவேளை, வரலாற்றில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் அமையலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களமும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், 67 டெங்கு அபாய வலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த தரவுகளின் படி, இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,961 ஆகும். மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,435 ஆகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே,

அண்மைக்கால வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் அமையும் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். ஒரு வாரத்தில் தினசரி டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,500ஐ நெருங்குகின்றது.

இது மிகவும் தீவிரமான நிலை.340 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 20% டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக மாறியுள்ளன.

கண்டி, புத்தளம், குருநாகல், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதைக் காணலாம். அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாண எம்.பிக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்

videodeepam

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கம்பன் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் தீ பரவல் .

videodeepam

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடி

videodeepam