அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் இவர்களை பொலிஸாரும் உளவுத்துறையும் தேட வேண்டும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் கிராமிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தி ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.