deepamnews
இலங்கை

இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை ஆராய வேண்டும் – ஜனாதிபதி

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்து தெய்வங்களை வழிபடுகின்றார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுபோல தெற்கில் விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட ஏராளமான இந்து தெய்வங்களை வழிபடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்;.

வரலாற்றை மறந்துவிடுகிறோம் என்றும் எனவே, வரலாறு குறித்த அறிவையும் ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற காலநிலையால் தரையிறங்குவதில் குழப்பம்-மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம்.

videodeepam

தமிழர்கள் வாழும் இடங்களில் இராணுவ மயமாக்கல் தீவிரம் –  பிரிட்டன் எம்.பி. வலியுறுத்து

videodeepam

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்.

videodeepam