எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் ஆதரிக்கப்படும் வேட்பாளர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அத்தனகல்ல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் மக்கள் விடுதலை முன்னணி ஒரு கொலை கலாசாரத்தைக் கொண்ட கட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொட்டு ஒருபோதும் கொலைகாரக் கட்சி அல்ல என்றும், நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி என்றும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.