deepamnews
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இவர்களை விடுதலை செய்தமைக்காக தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று விடுதலை செய்யப்படும் 08 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என சார்ல்ஸ் நிர்மலநாதன் எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

Related posts

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை இந்தியா செல்கிறார் – பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்பு

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது

videodeepam