யாழ்.வல்வெட்டித்துறை – நாவலடியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்கள் மற்றும் கோடரிகளுடன் நுழைந்த வன்முறை கும்பல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றது.
சம்பவத்தின்போது அங்குவந்த அயலவர்கள் தாக்குதலை நடத்திய ரவுடி ஒருவனை மடக்கிப் பிடித்து கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் மேற்க் கொண்டு வருகின்றனர்.