deepamnews
இலங்கை

நுகர்வோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டம் – நளின் பெர்னாண்டோ அறிவிப்பு.

பொருள் ஒன்றை கொள்வனவு செய்யும்போது நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது குறித்த முறைப்பாட்டை முறைப்பாட்டு சபைக்கு முன்வைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் வழங்கும் முறைப்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கான இந்த புதிய செயல்முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, சட்ட உதவி ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்.

videodeepam

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் எவருமில்லை!

videodeepam

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்! – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சூளுரை

videodeepam