deepamnews
இலங்கை

பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: விசேட பொலிஸ் விசாரணை குழு நியமனம்!

சீதுவ – கிரிந்திகொட பிரதேசத்தில் பயணப்பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ்  குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் காணப்பட்ட பையிலிருந்து வெற்று போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொல்லப்பட்டு பயணப் பையில் வைத்து தடுகங் ஓயாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பயணப் பையில் இருந்து நபரொருவரின் கை தென்படுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு நிற மேல் சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்திருந்த குறித்த நபர் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திரங்கள் கொண்ட பச்சை குத்தியிருந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட குறித்த சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது என்கிறார் எஸ்.எம்.சந்திரசேன

videodeepam

தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு.

videodeepam

பண்டிகைக் காலங்களில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு

videodeepam