deepamnews
இலங்கை

போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

கிளிநொச்சி பூநகரி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவிற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (07-09-2023) பகல் பாடசாலையை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி கல்விக்கோட்டத்தின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பாடசாலையான வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விப் பிரிவுக்கான போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி இன்று காலை 07 மணிமுதல் பாடசாலையின் நுழைவாயிலை மூடி பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரம்ப பிரிவில் 79 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கடமையாற்றி வருவதாகவும் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும் குறித்த வெற்றிடத்திற்கு ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்குமாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நீண்ட காலமாக ஆசிரியர்கள் இல்லாதனால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஜெயபுரம் பெலிசார் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் ஆசிரியரை நியமிக்கும் வரை தாங்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டனர்.

எனவே குறித்த பாடசாலைகளுக்கான பாடசாலை ஆரம்ப பிரிவுக்கு ஆசிரியர் ஒருவரை இன்றைய தினம் நியமிக்கப்பட்டது அடுத்து கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது பின்னர் பெற்றோர்களுக்கும் உரிய அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் இன்றைய தினம் ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது-

Related posts

பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு

videodeepam

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த  முடியாது – பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam