deepamnews
இலங்கை

ஓய்வு நிலை பொலிஸ் அதிகாரிக்கு கௌரவிப்பு நிகழ்வு.

கிளிநொச்சி மாவட்டத்தின்  சிரேஷ்ட  பொலிஸ்  அத்தியட்சகராக கடமையாற்றி  கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் குணரத்ன  அவர்கள் கடமை புரிந்துள்ளார்.

இவர் பொலிஸ் சேவையில் இணைந்து 38 வருடங்களாக தன்னை முழுமையாக நாட்டு மக்களின் பாதுகாப்பு கடமையில் இணைத்துள்ளமையும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பிரதானியாக கடமை புரிந்துள்ளார்.

இவர் தற்போது பொலிஸ் பணியிலிருந்து முற்றுமுழுதாக ஓய்வு நிலை பெற்று செல்கின்ற மையால்  இந்நிகழ்வில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி ஹெட்டியாரச்சி, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொலிஸ் மா அதிபர் சமுத்திர ஜீவன் மற்றும்   பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என பலரும் கலந்து  கொண்டனர்.

இதன்போது இன்றையதினம் (07.09.2023) கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில்  பொலிஸ்  அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு பின்னர் தனியார் விடுதியில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது

Related posts

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி

videodeepam

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam