மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக உள்ளிட்ட ஐவர் நேற்று பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீனத்திற்கு எதிராக முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.