deepamnews
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பு.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலையில் இன்று முதல் தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் வடக்கு, வடமத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று (29) காலை இடம்பெற்றது.

videodeepam

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று திறந்துவைப்பு.

videodeepam

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி  இன்று சந்திப்பு 

videodeepam