கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடாக கரைச்சி,மற்றும் கண்டாவளை பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட ஏற்பாட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடிநீர்”விநியோகங்கள் “இத்தொகுதிகளில் உருத்திரபுரம், பரந்தன்D3 பன்னங்கண்டி, கோரக்கன்கட்டு, மற்றும் கோரக்கன்கட்டு குடியிருப்பு ஆகிய 5 இடங்களில் உள்ள தொகுதிகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேசிய நகர அபிவிருத்தி அமச்சின் செயலாளர், நீர்பாசன திணைக்கள அதிகாரி கிராமமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். அப்பகுதி மக்கள் பல காலமாக சுத்தமானகுடிநீர் இன்றி அவதியுற்று வந்த நிலையில் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுத்தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர் .