ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹாரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை தலா 35 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுனாதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சஹாரானின் சாரதி கஃபூர் மாமா, ஹம்ஸா மொஹிதீன் உட்பட நால்வர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மேலும் இவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.