சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வட்டி விகித அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வாகனங்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பினால் வாடகை சேவைகளை வழங்கும் முச்சக்கர வண்டி சாரதிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.