deepamnews
இலங்கை

யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

யாழ். மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குளிர்சாதனப் பெட்டியில் சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்தனர்.

Related posts

மனோ கணேசன் எம்.பி ஊடக சந்திப்பு

videodeepam

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

videodeepam

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என அறிவிப்பு

videodeepam