ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வை உறுதி செய்வதில் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர்அலி சப்ரி தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற இணைய மூலமான செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 6 தொடக்கம் 12 மாதங்களில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்காக, ஜனாதிபதி விக்கிரமசிங்க பணியாற்றி வருகிறார் என்றும், குறிப்பிட்டார்.
“அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதி செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வமாக உள்ளார்.
தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஈழம் மற்றும் பயங்கரவாதம் என்ற கருத்தியலில் இருந்து விலகியவர்கள் மற்றும் அனைத்து சமூகங்களும் ஒரே இலங்கையில் வாழ வேண்டும் என்று நம்புபவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.