deepamnews
இலங்கை

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துங்கள் – கஜேந்திரகுமார் கோரிக்கை

நாடாளுமன்றத்தை கலைத்து மக்களின் புதிய ஆணைக்கு   இடமளிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையியற் கட்டளை திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

“முன்னைய பிரதமரும், ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகிய பின்னர், இந்த சபை மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை.

இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இப்போதும் மக்களின் அந்த விருப்பம் நிராகரிக்கப்படுகிறது.

குருந்தூர் மலை என்பது தமிழ் மக்கள் வழிபாட்டில் ஈடுபடும் ஒரு புராதன இடமாகும். தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த விதுர விக்கிரமநாயக்க அங்கு அடிக்கல்லொன்றை நாட்டியிருந்தார்.

அந்த இடத்தை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

அந்த இடத்தை அழித்துவிட்டு அவ்வாறு விகாரையாக மாற்ற முடியுமா? அதற்கு யார் அனுமதி கொடுத்தது.

குறித்த விடயத்தில் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் ஒரு இனவாத திணைக்களமாக காணப்படுகின்றது. தொழிற்படும் விதமும் அப்படிதான் உள்ளது.

பௌத்த மதகுருவும் நீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளார். அங்கு தொடர்ச்சியாக இனவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்!

videodeepam

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

videodeepam

வாகன விபத்தில் சிக்கிய நிதி இராஜாங்க அமைச்சர்: காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

videodeepam