deepamnews
இலங்கை

வெளிநாடுகளில் இருந்து தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி அதிகளவு தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று,  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளினால் ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழப்பதாக  அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளால் சாதாரண பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகமாட்டார்கள் எனவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இன்று திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி.

videodeepam

இலங்கைக்கு  கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கும் பங்களாதேஷ்

videodeepam

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

videodeepam