deepamnews
இந்தியா

நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் விடுதலை கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்ட ஐவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான  விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி காவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 5 பேரின் விடுதலை தொடர்பான வழக்கின் விசாரணையை, வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய இருவர் கைது

videodeepam

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து 6 தமிழர்கள் விடுதலை –  சீமான் மற்றும் ராமதாஸ் வரவேற்பு

videodeepam

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் -நரேந்திர மோடி தெரிவிப்பு.

videodeepam