deepamnews
இலங்கை

வடக்கில் நேற்று அடுத்தடுத்து விபத்துகள் – 2 பேர் பலி, 50 பேர் வரை காயம்

நேற்று மாலை வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொடிகாமம் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது மோதியுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற  இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த  67 வயதுடைய சுந்தரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, மோதியதில், மிதிவண்டியில் சென்ற  முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நேற்ற மாலை 5.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய கந்தையா தவராசா என்பவரே இந்தச் சம்பவத்தில் மரணமானார்.

விபத்தையடுத்து பேருந்துச் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, வவுனியா- தவசிகுளம் பகுதியில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நேற்று  முகமாலைப் பகுதியில் பேருந்தும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிய விபத்தில், 47 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பாதிக்கப்பட்டால், குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கம் விடுபட முடியாது – ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு

videodeepam

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

videodeepam

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவி

videodeepam