deepamnews
இலங்கை

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 370.97 ரூபாவாகவும், கொள்வனவு விலை 360.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் சிறு உயர்வு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 367.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 352.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 422.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 406.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

Related posts

2022 இலங்கை வரலாற்றில் கடினமான ஆண்டு – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam

நாட்டின் அபிவிருத்திக்கு சீன அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் – சீன சர்வதேச ஒத்துழைப்பு முகாமை

videodeepam

உலக சந்தையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை

videodeepam