deepamnews
இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இன்றைய விலை குறித்து வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது.

இதற்கமைய, இன்றைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

சீனி ஒரு கிலோகிராம் 238 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளைப்பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 145 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பொன்னி சம்பா ஒரு கிலோகிராம் 175 ரூபாய் முதல் 185 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. நாடு அரிசி ஒரு கிலோகிராம் 160 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

கோதுமை ஒரு கிலோகிராம் 260 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளைபூடு ஒரு கிலோகிராம் 390 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இதனை புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

videodeepam

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்,

videodeepam

வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் கடமையேற்பு

videodeepam