deepamnews
சர்வதேசம்

கனடாவில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை -ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க திட்டம்

கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் இலக்குகளை உயர்த்தியுள்ளதாகவும் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கனடா இப்போது 2023-ல் 465,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க எதிர்பார்க்கிறது, இது முந்தைய இலக்கை விட 4 சதவீதம் அதிகம், அதுமட்டுமன்றி 2024-ல் 4,85,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை (7.5 சதவீதம் அதிகம்) எதிர்நோக்குகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2015-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குடியேற்றத்தை கடுமையாக அதிகரித்துள்ளார். அந்த வகையில் கனடா இந்த ஆண்டு தோராயமாக 431,000 புதியவர்களை இலக்காகக் கொண்டு முன்னேறும் பாதையில் உள்ளது .

கனடா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது, குறிப்பாக வர்த்தகம் மற்றும் சுகாதாரம் போன்ற தொழில்களில் திறமையான பணியாளர்களை தேடுகிறது. ஓகஸ்டில் கனடாவில் 958,500 ஓபன் ரோல்களும் 10 லட்சம் வேலையில்லாதவர்களும் இருந்ததாக சமீபத்திய வேலை காலியிட தரவு காட்டுகிறது.

ஆனால், அங்கு வேலையில்லாதவர்களில் பலருக்கு அந்த திறந்த நிலைகளை நிரப்புவதற்கான திறன்கள் இல்லை, அல்லது நாட்டின் சரியான பகுதிகளில் வசிக்கவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று ஒரு அறிக்கையில், கனடாவின் வணிக கவுன்சில் பொருளாதார குடியேற்றத்தில் லட்சக்கணக்கான புதிய நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam

சூடானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேற்றம்!

videodeepam

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உகாண்டாவில் புதிய சட்டம்

videodeepam