அரச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் தலையிட்டு, ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென உலகின் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளின் ஒன்றியமான G20 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் G20 உச்சிமாநாட்டின் பின்னர் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் நிலையை விட மிக மோசமான நிலையில் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நெருக்கடி நிலை காணப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர வருமானம் பெரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து, இந்தோனேசியாவின் பாலி நகரில் இடம்பெறும் G-20 மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பிற்கான எதிர்வுகூறப்படக்கூடிய காலம், இணைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட வரைபை தயாரித்துக் கொள்வதற்கு G-20 நாடுகளின் தலைவர்கள் முயற்சிப்பதாக, உத்தேச கூட்டறிக்கையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.