deepamnews
இலங்கை

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை என்று  தமிழ் தேசிய  மக்கள்  முன்னணியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தின் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காணப்படக்கூடிய மாகாணசபைகளை விடுத்து மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னோக்கி  பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உடனே எழுந்து தான் மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவதற்கு தயார் என்று கூறியிருந்தார். அவை ஊடகங்களில்  வெளிவந்தன. ஆனால் தற்போது அதனை மறுத்து இருக்கிறார்.

இதற்கு பிரதான காரணம் ஒருபுறம் இருக்க  தமிழ் கட்சிகளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அழைத்துள்ள நிலையில் அதில் மாகாணங்களை தவிர்ந்து மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை வழங்குவோம் என்று தெரிவித்த நிலையில் தமிழ் கட்சிகள் நிபந்தனைகள் இன்றி அவரிடம் சரணடைய செய்துள்ளார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த மூன்று தரப்பினர்களும் அன்று ஒன்றிணைந்தது தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு செய்த சதி அம்பலமாகிய நிலையில் இன்று மாவட்ட அபிவிருத்தி சபை அமைப்பது எனும் புதிய உத்தியில் இந்த மூன்று புள்ளிகளும் மீண்டும் சந்திப்பது என்பது மற்றொரு அரசியல் நாடகமாகும்.

இந்த நாடகத்தை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தீர்வு என்னும் பேரில் வரும் போகும் சதி முயற்சியாகும். சமஷ்டி ஆட்சி எனும் போர்வைக்குள் தீர்வு கொண்டு வரப்போவதாக  கூறிக்கொண்டு எங்களுடைய விருப்பத்தின் பேரில் நாட்டில் ஒற்றையாட்சியை கொண்டு வருவதற்கான சதி இடம்பெறவிருக்கிறது.

தமிழ் கட்சிகளுடைய ஆதரவினை பெற்றுகொண்டு எதிர்கொள்ள உள்ள நெருக்கடிகளுக்கு  சர்வதேச நாடுகளுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள கூடிய இந்த சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களையும் பாரியதொரு பின்னடைவுக்கு இட்டுச்செல்லும்.

தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுடைய அரசியல் நாடகங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இனியாவது அரசியல் தலைவிதியை தங்களுடைய  கைகளுக்கு எடுக்க வேண்டும் என்றார்.  

Related posts

தமிழர்கள் விடயத்தில் கருணாவை வைத்து காய் நகர்த்தும் இலங்கை அரசாங்கம்..?

videodeepam

தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

videodeepam

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணிலை சந்திக்கிறது கூட்டமைப்பு

videodeepam