deepamnews
இலங்கை

வீட்டுப் பணிப்பெண்ணாக செல்வோருக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானம்

வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான கற்கை நெறிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மூன்றாம் நிலை நிபுணத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படும் போது இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவம் மற்றும் திறமையுடைய பெண்களை இந்த வேலைவாய்ப்புக்காக அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்கான நிதி வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது – ஸ்ரீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

videodeepam

முச்சக்கர வண்டிகளின் பதிவு அவசியம் ; இல்லா விட்டால் சங்கப் பதிவை நீக்குங்கள் – அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை.

videodeepam

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – சரத் வீரசேகர தெரிவிப்பு

videodeepam