deepamnews
இலங்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 309 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

சிறைச்சாலைகளிலுள்ள 309 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

நத்தார் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த 309 பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் 306 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனிடையே, உறவினர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவ மத கைதிகளுக்கு மாத்திரஇன்று அனுமதி  வழங்கப்படவுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவு ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமானதாக இருக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளதுடன் கரோல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக   திணைக்களம் கூறியுள்ளது.

Related posts

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

videodeepam

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்!

videodeepam

தென்கொரிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

videodeepam