deepamnews
இலங்கை

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு இன்று அஞ்சலி !

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் மறைந்த மு.றெமீடியஸ்க்கு யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொது விபத்துக்குள்ளானார்.

படுகாயத்தோடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

videodeepam

சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் இலங்கை அரசின் உறுதிப்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

videodeepam

TikTok க்கினால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்

videodeepam