deepamnews
இலங்கை

சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

மக்கள் தமது வழமையான சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீள அமுல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து  வினவியபோதே, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்கின்றமை மற்றும் குறைவடைகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விசேட வைத்திய நிபுணர்களுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்குவார் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

விசேடமாக பண்டிகைக் காலத்தில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்தல், களியாட்டங்களில் ஈடுபடுதல், ஒன்று கூடுதல், சுற்றுலா செல்தல் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணங்களில் ஈடுபடல் உள்ளிட்ட செயற்பாடுகளின் போது மக்கள் தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.

விமான நிலையங்களில் தற்போது எந்தவொரு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், சூழ்நிலைகளை ஆராய்ந்து விசேட நிபுணர்கள் பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோர் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், மக்கள் அவதானமாக செயற்படுவது போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.  

Related posts

தேர்தலை நிறுத்தினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – விஜித ஹேரத்  எச்சரிக்கை

videodeepam

13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

videodeepam

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு.

videodeepam