உக்ரேனுக்கு தனது லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை விநியோகிப்பதற்கு ஜேர்மனி அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக சம்மதித்துள்ளது.
லெப்பர்ட் 2ஏசி ரகத்தைச் சேர்ந்த 14 தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி வழங்கும் என ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் ஸ்டீபன் ஹேபேஸ்ட்ரெய்ட் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் தம்மிடமுள்ள லெப்பர்ட்2 தாங்கிளை உக்ரேனுக்கு வழங்கவதற்கும் ஜேர்மனி அனுமதியளித்துள்ளது.
ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்வதற்காக இத்தாங்கிகளை வழங்குமாறு உக்ரேன் கோரியது. எனினும் அதற்கு அனுமதியளிக்க ஜேர்மனி தயங்கிவந்தது.
இத்தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்குமாறு மேற்குலக நட்பு நாடுகளும் ஜேர்மனியை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இதற்கான அனுமதியை ஜேர்மனி நேற்று வழங்கியுள்ளது.
ஜேர்மனியின் தீர்மானத்தை பிரித்தானிய பிரதமர் ரஷி சுனக் வரவேற்றுள்ளார்.