75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப் பிரச்சினைக்கான தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து வலுவிழந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுதந்திர தினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இலங்கை தற்போது, வங்குரோத்து நிலைக்கு சென்று பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாத ஒரு நாடாக மாறியுள்ளது.
நாட்டில் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்ற சூழ்நிலையில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், நாட்டு மக்கள் அனைவரும் அதனை புறக்கணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்
இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன தெரிவித்துள்ளார்.