deepamnews
இலங்கை

குற்றப்பத்திரத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – அமைச்சர் கஞ்சனவுக்கு ஜனக்க ரத்னாயக்க பதில்

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க பதிலளித்துள்ளார்.

ஜனக்க ரத்னாயக்கவை குறித்த ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இதற்கு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்தநிலையிலேயே குறித்த குற்றப்பத்திரிகை தொடர்பில் ஜனக்க ரத்னாயக்க தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, விரைவில்  குறித்த ஆணைக்குழு கூடி புதிய கட்டண திருத்தம் தொடர்பில் விரைவான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஜக்கியதேசியகட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இண்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது.

videodeepam

நாட்டில் திருமண விகிதமும் பிறப்பு விகிதமும் குறைவு.

videodeepam

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் – மொட்டுக் கட்சி தெரிவிப்பு

videodeepam