ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.பி. பதவியை இழந்ததாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.