இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச அமைப்பு தொடர்பான இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவை காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும்.
இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் 124 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் டாக்டர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.